இசையுலகின் ஜாம்பவான்…. 40 வருட சினிமா வாழ்க்கையில் இளையராஜா இசையமைக்காத ஒரே நடிகரின் படம்…. ஆச்சரியமூட்டும் தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இளையராஜா. இவரின் இசைக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் பல பாடல்களும் இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அனைவருடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

இசைஞானி மற்றும் மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படும் இளையராஜா தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்துள்ளார். இவர் 1986 ஆம் ஆண்டு முதல் முதலில் தமிழ் திரைப்படப் பாடலை கணினி மூலமாக பதிவு செய்து சாதனை படைத்தார். இந்த சாதனையை அவர் செய்த படம் கமல் நடித்த விக்ரம் தான்.இப்படி ஆல் ரவுண்டராக வளம் வந்து கொண்டிருக்கும் இசைஞானி தன்னுடைய 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரின் திரைப்படத்தில் மட்டும் இசையமைக்க வில்லை.

அதாவது தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த வெற்றி இயக்குனரான டி ராஜேந்திரன் மட்டும் சேர்ந்து இளையராஜா பணி புரியவே இல்லையா. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருப்பவர் டி ராஜேந்தர். இவர் இயக்கிய நடித்த முதல் 26 படங்களுக்கும் இவரே இசையமைத்துள்ளார்.

இப்படி கதை எழுதுவது, இயக்குவது,பாடல் இசைப்பது மற்றும் பாடல் எழுதுவது என அனைத்தையும் இவரை செய்ததால் மற்ற இசையமைப்பாளர்களுடன் சேர்ந்த இவர் பணிபுரிந்ததே கிடையாதா.அதனால் தான் இளையராஜா மற்றும் டி ராஜேந்தர் ஒன்றாக இணைந்து பணியாற்றவே இல்லை என தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.