அய்யோ…. திரிஷாவுக்கு திடீரென என்ன ஆச்சி?….. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.  39 வயதாகியும் தற்போது வரை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனிடையே 40 வயத நெருங்கிக் கொண்டிருக்கும் திரிஷா இன்னும் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார்.

இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது விஜயின் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.