
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அண்மையில் தனது 5 வருட காதலியை புகழ் திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் முஸ்லிம் என பல மத முறைப்படி தனது காதலியை மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் புகழின் மனைவி பென்சி தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இருந்தாலும் இதை உறுதி செய்யும் வகையில் எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.