வாடகை தாய் சர்ச்சைக்கு இடையே…. அந்த விஷயத்தை காதும் காதும் வைத்தது போல் முடித்த நயன் – விக்கி…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்குப் பிறகு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் அவ்வபோது தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்த நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தனர்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நயன் மற்றும் விக்கி தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர். அதே சமயம் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடைபெற்றது என்று ஆதாரங்களை சமர்ப்பித்த உடன் இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதனிடையே தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தாலியுடன் இருந்த நயன்தாரா கயிறை எடுத்துவிட்டு தற்போது செயின்னாக மாற்றி உள்ளார். தாலி மாற்றும் சடங்கு இடையில் எப்படி நடந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.