பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மைனா நந்தினிக்கு இப்படி ஒரு கஷ்டமா?…. மனம் வருந்தி உண்மையை போட்டுடைத்த கணவர்….!!!!

விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

அந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்திலும் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவரின் நகைச்சுவை காமெடிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனிடையே சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். எப்போதும் நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் மைனா தற்போது பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருகிறார்.

இதனிடையே மைனா நந்தினியின் முதல் திருமணம் பிரச்சனையில் முடிந்தாலும் தற்போது யோகேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் யோகேஷ் ஒரு பேட்டியில், மைனா நிகழ்ச்சியில் இருப்பதற்காக பெயிடு ப்ரோமோஷன் செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் அது சற்றும் உண்மை இல்லை.

இன்னும் சொல்லப்போனால் நாங்கள் புதிதாக கார் ஒன்று வாங்கி இருக்கோம். அதுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு நாங்கள் படாத பாடு படுகிறோம். இரண்டு குடும்பத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இரண்டு வருமானத்தை வைத்து குடும்பத்தை பார்ப்பேனா? குழந்தையை பார்ப்பேனா? இல்லை அதெல்லாம் விட்டு பெயிடு ப்ரமோஷன் செய்வேனா? நாங்கள் அப்படி செய்தது கிடையாது என அவர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.