என்னது… சமந்தாவுக்கு வந்திருக்கும் அந்த நோய் இந்த டாப் ஹீரோவுக்கு இருக்கா?…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமந்தாவுக்கு வந்திருப்பது போலவே ஆட்டோ இம்யூன் நோய் ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு trigeminal neuralgia என்ற நோய் கடந்த 2001 ஆம் ஆண்டு வந்துள்ளது. சல்மான் கானுக்கு multiple sclerosis பிரச்சனை இருந்ததால் அவரின் மூளை மற்றும் முதுகெலும்பு ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.