பிக்பாஸ் சீசன் 6: வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினா யார் தெரியுமா?….. பலரும் அறியாத இதோ சில தகவல்…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் மிக விறுவிறுப்பாக ஓடி கொண்டு இருக்கிறது.முதலில் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல் வார பிக் பாஸ் நாமினேஷனில் இடம்பெற்று இருந்த சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் பெண்களிடம் பல சில்மிஷம் செய்து சர்ச்சையில் சிக்கிய அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதனைப் போலவே இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களிடம் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற செரீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.இவர் ஒரு மாடல் என்பதை பலரும் அறிந்திருப்போம்.

 

அதுமட்டுமல்லாமல் சமுத்திரகனி இயக்கி நடித்து வெளியான விநோயத சித்தம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நடிகை ஷெரினா குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.