இது எப்படி சாத்தியம்?…. திருமணம் ஆகி 7 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகை….. ஷாக்கான ரசிகர்கள்….!!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தற்போது ஆலியா பட், கல் இதயம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சமூக வலைத்தளங்களில் இவர் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இதனிடையே ஆலியா பட் ரன்பீர் கபூர் ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக சில தகவல்கள் வெளியானது.அதன் பிறகு அவர் கர்ப்பமாகத்தான் இருக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பிரசவ வழியில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.இதனை தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் திருமணம் ஆகி 7 மாதங்கள் கூட இன்னும் நிறைவு பெறாத நிலையில் ஆலியா பட் குழந்தை பிறந்துள்ளதே என நெட்டிசன்கள் கமாண்ட் செய்து வருகிறார்கள்.