விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் இளைய மகள்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் வீடியோ….!!!!

இந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. தெலுங்கில் வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைப் போலவே தமிழ் சினிமாவில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இலங்கைத் தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் ரம்பா தனது குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு அதிக காயங்களுடன் அவரின் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியுள்ள நிலையில் விபத்தில் தாக்கத்திலிருந்து குழந்தைகளை மாற்றி வருவதாக நடிகை ரம்பா வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

RambhaIndrakumar💕 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rambhaindran_)

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.