நடிகர் கமலின் அண்ணன் – அண்ணி யார் தெரியுமா?…. பிறந்தநாளில் ஆசி பெற்ற அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட் வந்தபடி உள்ளது.

இதனிடையே நேற்று கமலின் 234 ஆம் படத்தின் அறிவிப்பு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் வெளிவந்தது. மணிரத்தினம் இயக்கத்தில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் படிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் என்பதை பலரும் அறிந்திருப்போம்.

அவர் தளபதி மற்றும் தில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரின் மனைவி கோமளம். தற்போது கமல்ஹாசன் தனதுஅண்ணன் மற்றும் அண்ணியிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.