20 வயது இளம் நடிகையுடன் ஜோடி போடும் ஜிவி பிரகாஷ்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான அப்டேட்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அண்மையில்  தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அரசியல் மற்றும் சினிமா உட்பட எந்த பிரச்சினையாக இருந்தாலும் ட்விட்டரில் தைரியமாக கருத்து சொல்வதில் தயங்கியதே கிடையாது.

தற்போது அவரின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஜிவி பிரகாஷ் மலையாள திரை உலகின் இளம் நடிகை அலாஸ்வர அணஸ்வரா ராஜன் என்பவர் உடன் ஜோடியாக நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.