இப்போ எப்படி இருக்க?…. விவாகரத்திற்கு பிறகு சமந்தாவிடம் முதன் முறையாக பேசிய நாக சைதன்யா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனிடையே சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது சமந்தாவிற்கு மையோ சிடிஸ் என்று அரிய வகை நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி திரை உலகிநர் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை நேரில் சென்று நாக சைதன்யா கூற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனிடையே சமந்தாவை மருத்துவமனையில் நாக சைதன்யா சென்று பார்த்ததாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் விசாரித்த நிலையில் இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சமந்தா  யசோதா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

அதற்காக அவர் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் சமந்தா வாடிய முகத்துடன் இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் கலங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் சமந்தாவின் கணவர் விவாகரத்திற்கு பிறகு சமந்தாவின் உடல்நிலை பற்றி அவரிடம் போனில் கேட்டறிந்ததாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.