42 வயதிலும் 18 வயது இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை ரேஷ்மா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா  தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியனின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலமாகி வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் 42 வயதாகியும் இளமையுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக போட்டோ ஷூட் எடுத்து அதனை தற்போது வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Reshma Pasupuleti இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@reshmapasupuleti)

 

அது தற்போது வைரலாகி வருகிறது.