3 வயது சிறுமியுடன் 2 பேர் பாலியல் வல்லுறவு! பெற்ற தாயும் உதவிய கொடூரம்!

திருவள்ளூரைச் சேர்ந்த 3 வயதுச் சிறுமியை இருவர் 10 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குழந்தையின் தாய் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருவள்ளூரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது பெண் குழந்தைக்கு 3 வயது ஆகும் நிலையில் திடீரென பெண்ணும் குழந்தையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்கள் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆந்திராவில் உள்ள பெண்ணின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு போலீசார் அவர்கள் தங்கள் மகளும் பேத்தியும் தங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சில தினங்களுக்குப் பின் அந்தப் பெண் தனது 3 வயதுக் குழந்தையுடன் வீடு திரும்பினார். ஆனால் பெண் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்களின் சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் குழந்தையின் தாயிடம் உரிய முறையில் விசாரித்தபோது அந்தப் பெண் அதிர்ச்சிகரமான உணமைகளை ஒப்புக் கொண்டார்.  தான் ஆந்திர மாநிலத்துக்கு தனது முன்னாள் காதலனைக் காண உறவினர் ஒருவருவடன் சென்றதாகவும்.

அவர்கள் குழந்தையிடம் தகாத முறையில் நடந்துகொண்டதையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து குழந்தையின் தாய் மற்றும் இரண்டு ஆண்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.