3 வயது மகனை தலையில் கட்டையால் அடித்த கொடூர தாய்! மாநிலமே அதிர்ந்த பயங்கரம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

கேரள மாநிலம், கொச்சியில்தான் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலையில் அடிபட்டதாகக் கூறி, அங்குள்ள அரசு மருத்துவமனையில், சிறுவனை அவனது தந்தை சேர்த்துள்ளார். ஆனால், மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் தலையில் யாரோ மரக்கட்டையால் தாக்கியது தெரியவந்தது. அத்துடன், அவனது உடல் முழுக்க தீக்காயங்களும் இருந்துள்ளன. இதன்பேரில், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து சிறுவனின் தந்தையை விசாரித்தபோது, தனது மனைவிதான் இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளார். அத்துடன், அவர்கள் 2 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து, மருத்துவர்கள், குறிப்பிட்ட சிறுவனின் மூளையை பரிசோதித்தபோது, வலது புற மூளை செயலிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சிறுவனுக்கு, அறுவை சிகிச்சை செய்து, காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடினர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துவிட்டான். இதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிறுவனின் பெற்றோர் பற்றி விவரம் தரும்படி ஜார்க்கண்ட் போலீசாரிடம் கேட்டுள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.