ஹரியானா மாநிலம், குருகிராம் நகரில் உள்ள செக்டார் 56 பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 வயது பெண் ஒருவர் சமீபத்தில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு லேப் டெக்னிஷியன் வேலை செய்யும் நபர் அவரிடம் தவறாக நடந்துகொண்டார் என்று புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் போலீசில் புகார் கூறினாலும், மருத்துவமனை இயக்குனரின் தலையீட்டால், அந்த புகாரின் வடிவம் மாறியுள்ளது. ஆம், விஷம் குடித்ததற்காக சிகிச்சை பெற்ற அப்பெண்ணை.
உடன் வந்தவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்றும், மருத்துவமனை ஊழியர்கள் யாரும் எதுவும் செய்யவில்லை என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை இயக்குனர் தரப்பில் புகார் தரப்பட்டது. இதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.