17 மணி நேரம் தொடர்ந்து ஷூட்டிங்..!! மாரடைப்பால் மரணமடைந்த பிரபல இளம் நடிகர்! நள்ளிரவு 2 மணிக்கு நடந்த சோகம்

கனடாவில் சிறுவயது முதல் வசித்து வந்த பிரபல நடிகரும், மொடலுமான Godfrey Gao 35வது வயதில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். தைவானில் பிறந்த Godfrey Gao இளம் வயதிலேயே கனடாவின் வான்கூவருக்கு பெற்றோருடன் இடம் பெயர்ந்தார். அங்குள்ள கபிலனோ பல்கலைக்கழகத்தில்

தனது படிப்பை முடித்த Godfrey Gao பின்னர் மொடலிங் துறை மற்றும் சினிமா துறையில் நுழைந்து பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில் கடுமையான ஜலதோஷத்தில் அவதிப்பட்ட Godfrey Gao செவ்வாய்கிழமை தொடங்கி அடுத்த 17 மணி நேரத்துக்கு இடைவிடாமல் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணிக்கு Godfrey Gaoவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் கீழே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 மணி நேரத்துக்கும் அதிகமாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Godfrey Gao-வின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.