45 வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்த ஆண்..! ஒரே மாதத்தில் ஓட்டம் பிடித்த புதுப்பெண்..

சென்னையில் நபரை திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுப்பெண்ணை திருமணம் செய்து வைத்த பெண் புரோக்கர், நகை மற்றும் பணத்துடன் அழைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொண்டித்தோப்பை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின், அடகுக்கடை நடத்திவரும் இவருக்கு 45 வயதான நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை.இதையடுத்து பெண் புரோக்கர் லட்சுமி, பூனாவைச் சேர்ந்த அழகான பெண் ஒருவரை ஆனந்த் ஜெயினுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி கமிஷனாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

முன்பணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட லட்சுமி, ஜெயஸ்ரீ என்ற பெண்ணை, ஒரு மாததுக்கு முன்னர் ஆனந்துக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின்னர் அடிக்கடி ஜெயஸ்ரீயுடன் பழகி வந்த லட்சுமி, கடந்த 20-ம் திகதி அவரை அழைத்துக்கொண்டு பூனாவுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

போகும் போது, வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் சென்று விட்டதாகவும், பணம் மற்றும் நகையைக் கொள்ளையடிக்கும் நோக்கில் தனக்கு ஜெயஸ்ரீயை திருமணம் செய்து வைத்து லட்சுமி மோசடி செய்ததாகவும்.

ஆனந்த் ஜெயின் பொலிசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து ஜெயஸ்ரீயின் பின்னணி குறித்து மேலும் அவர்கள் மீது இது போன்று வேறு சில வழக்குகள் உள்ளதா என்று அறிய அவரை தேடி புனேவுக்கு செல்ல பொலிசார் முடிவு செய்துள்ளனர்.