5 ஆண்டுகளாக மாதவிடாய் வரவில்லை: 18 வயது இளம்பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான ரேபெக்கா என்ற பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாதவிடாய் வராத காரணத்தால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேபோது அவரது கருவகத்தில் 15 செமீ அளவில் நீர்க்கட்டிகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ரேபெக்காவுக்கு 12 வயது இருக்கும்போதே மாதவிடாய் நின்றுபோனது. வயிறு மற்றும் கால் பகுதியில் தொடர்ந்து வலி அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. மருத்துவரிடம் அனுகியபோதும் சோதனையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என தெரியவந்தது. ஆனால் இடதுபக்க சிறுநீரகத்தில் தனக்கு வலி ஏற்பட்டதாகவும், ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும்போது ஏற்பட்டும் வலியை தான் உணர்ந்தபோதும், மாதவிடாய் வரவில்லை என கூறியுள்ளார்.

14 வயதை அடைந்தபின்னரும், வலி அதிகமானபின்னர் மீண்டும் மருத்துவரை அனுகியபோது, அப்போதும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றுதெரிவித்தனர். ஆனால், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்துபார்த்தபோதுதான் எனது கருவகத்தில் நீர்க்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. கருவகம் என்பது பெண் இனப்பெருக்க அமைப்பில் காணப்படும் ஒரு உறுப்பு. கருவகம் முழுவதும் சுற்றியிருந்த இந்த நீர்க்கட்டி ஏனைய உறுப்பகளை பாதிக்கும் என்பதால் கருவகத்தை கண்டிப்பாக நீக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை மூலம் கருவகம் நீக்கப்பட்டது. இதனால் எதிர்காலத்தில் எனக்கு குழந்தை பிறக்காதோ என்ற அச்சம் இருந்தது. இருப்பனும் இடது பக்கம் கருவகம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளதால்,

வலது பக்கம் கருவகத்தின் உதவியோடு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது, எனது படிப்பினை தொடர எனக்கு பெற்றோர் அனைத்து விதத்திலும் உதவியாக இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.