65 வயது ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்த 20 வயது மாணவி: ரகசியமாக நடந்த சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் தன்னிடம் டியூசன் படிக்க வந்த 20 வயது இளம் மாணவியை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.

இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர்.

இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்ததுபஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.

நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் இருவரையும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, பஞ்சாப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.