7 அழகிகளுடன் டேட்டிங் செய்த பிரியங்கா சோப்ராவின் காதலர்.. வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்துகொள்ள உள்ள அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ், இதற்கு முன்பு 7 அழகிகளுடன் டேட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். பிரபல பாடகர் நிஜ் ஜொனஸ் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா காதலை ஒப்புக்கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்டு மாதம் மும்பையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 2ம் தேதி, ஜோத்பூரில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராக்கு முன்பே 7 அழகிகளை காதலித்து டேட்டிங் வரை சென்று பிரிந்துள்ளார் என்று ஒரு செய்தி வெளியாகி அவர்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மைலி சைரஸ் நிக் ஜோனஸும், மைலி சைரஸும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் டிஸ்னி தொலைக்காட்சியில் அறிமுகமாகி பிரபலமானார்கள். இருவரும் காதலிப்பதாக தகவல்கள் தெரிவித்தன. எனினும், 2009-ம் ஆண்டு ’தி லாஸ்ட் சாங்’ படத்தில் மைலி சைரஸ் நடித்தபோது, சக நடிகர் லியாம் ஹென்ஸ்வொர்த்துடன் காதலில் விழுந்தார். மைலி சைரஸுடன் பழகிய நாட்கள் குறித்து 2012-ல் நிக் ஜோனஸ் வெளிப்படையாகக் கூறினார்.

செலீனா கோமஸ்: மைலி சைரஸுடன் பிரேக் அப் ஆனதைத் தொடர்ந்து செலீனா கோமஸ் என்பவருடன் நிக் ஜோனஸ் சிறிது காலம் டேட்டிங்கில் ஈடுபட்டார். ’பர்னிங் அப்’ என்ற மியூசிக் வீடியோவில் நடித்தபோது இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டதாக நிக் ஜோனஸ் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

ரிடா ஓரா: 2013-ல் சக பாப் இசை பாடகியான ரிடா ஓராவுடன் நிக் ஜோனஸ் இணைத்து பேசப்பட்டார். எனினும், நிக் ஜோனஸுடன் டேட்டிங்கில் ஈடுபடவில்லை என ரிடா ஓரா தெரிவித்தார்.

டெல்டா குட்ரெம்: நிக் ஜோனஸ் 2011-12 காலகட்டத்தில் டெல்டா குட்ரெம் என்பவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார். அப்போது, நிக் ஜோனஸுக்கு வயது 18, டெல்டாவுக்கு வயது 26. எனினும், இந்தத் தொடர்பு 10 மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிப்ரவரி 2012-ல் இருவரும் பிரிந்தனர்.

ஒலிவியா கல்போ: 2012-ல் மிஸ் யூனிவர்ஸ்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒலிவியா கல்போவுடன் நிக் ஜோனஸ் 2013 முதல் 2015 வரை நெருக்கமாக இருந்தார். பின்னர், இருவரும் பிரிந்தனர்.

கேட் ஹட்ஸன்: 2016-ல் கேட் ஹட்ஸன் என்பவருடன் நிக் ஜோனஸ் நெருங்கிப் பழகினார். இதை கேட் ஹட்ஸனின் தாய் கோல்டி ஹான் உறுதிப்படுத்தினார்.

லில்லி கோலின்ஸ்: இசை மேதை பில்லின் மகள் லில்லி கோலின்ஸுடன் 2016-ல் டேட்டிங்கில் ஈடுபட்டதாக நிக் ஜோனஸ், ’தி சன்’ என்னும் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 2009 முதல் லில்லியுடன் நட்பு பாராட்டியதாக நிக் கூறியிருந்தார்.தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்திலும், ஊடங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.