
8 வருடமாக காதலித்த பெண் திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் ஓட்டமெடுக்க காதலி, வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.கல்லூரியில் இனித்த காதல், திருமணம் என்றதும் கசந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த சம்மு என்பவர் தான் காதலனின் வீட்டு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளம் பெண்.இவரும் மணிவண்ணன் என்ற இளைஞரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இதில் மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தார் சம்மு.
இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிவண்ணை சம்மு வற்புறுத்திய நிலையில் அவர்களுக்குள் கடந்த 2 மாதங்களாக விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை சம்மு தனது குடும்பத்தினருடன் மணிவண்ணன் வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வந்த நிலையில் அதை விரும்பாத அவர் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதையடுத்து மணிவண்ணனின் வீட்டின் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் சம்மு.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சம்முவிடம் விசாரித்த போது அனைத்தையும் வேதனையுடன் தெரிவித்தார்.
பின்னர் பொலிசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்