தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கு எப்போது வரவேற்பு இருக்கும், அதுவே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் படி அப்படம் அமைந்துவிட்டால், அந்த படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவர். அந்த வகையில் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. படத்தில் நடித்த விஜய்சேதுபதி-த்ரிஷாவுக்கு மட்டுமின்றி, குட்டி ராமு, குட்டி ஜானுவாக நடித்த இரண்டு பேருக்குமே நல்ல பெயர் கிடைத்தது. இதில் குட்டி ராமுவாக எம்.எஸ்.பாஸ்கரனின் மகன் ஆதித்யா நடித்திருப்பார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரின் தங்கை புகைப்படம் வெளியாகியிருந்தாலும், இந்த புகைப்படத்தில் அவர் பார்க்க செம அழகாக இருக்கிறார். இதனால் இணையவாசிகள் அவருக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்கலாமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…