தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் துப்பறிவாளன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளையாகிய திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழை தவிர்த்து தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் அல்லு சீரிஸ் ஜோடியாக Oorvashivo Rakshasivo திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இந்த திரைப்படம் அண்மையில் ரிலீசான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் அவர்களின் ரொமான்ஸ்சை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்நிலையில் அல்லு சீரிஸ் மற்றும் அணு இமானுவேல் நிஜத்திலும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .
முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தம்பி தான் அல்லு சிரிஷ். இதனிடையே ஒரு பேட்டியில் அணு இம்மானுவேல் பதிலளித்துள்ளார். இந்த படத்தின் பூஜையில் தான் நான் அவரை சந்தித்தேன்.அவரை அதன் பிறகு கதாபாத்திரங்கள் பற்றி பேச காபி ஷாப்பில் ஒரு முறை சந்தித்ததில் இருந்து தான் இப்படி கிசுகிசு பேசுகிறார்கள். எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது என அணு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.