
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் திருமுருகன். இவரை கோபி என்று சொன்னால்தான் பலருக்கு தெரியும்.அவ்வகையில் அறிமுகமான முதல் சீரியல் ஆன மெட்டிஒலி மூலமாக இவர் கோபி கதாபாத்திரத்தில் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் இவர் இயக்கம் அனைத்து சீரியல்களிலும் வளம் வந்தாலும் இவருடைய பெயரை தற்போது வரைக்கும் ரசிகர்கள் பலர் கோபி எனத்தான் அழைத்து வருகிறார்கள்.
காரைக்குடியைச் சேர்ந்த இவர் எடுக்கும் சீரியல்கள் எல்லாமே கிராமங்களை மையமாகக் கொண்டதாக தான் இருக்கும். நடிப்பை விட இயக்கம் இவருக்கு மிகவும் பிடித்தது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலமாக இவர் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்த இந்த சீரியலை இயக்கியும் வந்தார்.
இதனைத் தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலிலும் கோபி என்ற பெயரை இவர் வைத்துக் கொண்டார். கொரோனா லாக் டவுன் சமயத்தில் மீண்டும் ஒளிபரப்பான இந்த தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.திருமுருகன் சீரியலில் மட்டுமல்லாமல் எம் மகன் மற்றும் முனியாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது கோபியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் நடிகர் விமல் மற்றும் போஸ் வெங்கட் உடன் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.