
பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைதான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
தற்போது மக்களிடையே டிவி சீரியல்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இதில் முக்கியமான சீரியல் தொடர் ஒன்று வாணி ராணி ராதிகா சரத்குமார் இதை தயாரித்து நடித்துள்ளார்.
இதில் நடித்துள்ள சங்கீதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்தில் சீரியல் நடிகை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் தனியார் ரிசார்ட்டில் விபச்சாரம் நடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பொலிசார் சோதனை நடத்திய போது, அங்கு சில சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்து வரும் நடிகை சங்கீதா அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு உதவியாக செயல்பட்ட சுரேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டார்.