IPL பார்க்க அட்லீ அணிந்து வந்த ஜாக்கெட்டின் விலை மட்டும் இத்தனை ஆயிரம் ரூபாயா?

IPLல் சமீபத்தில் நடைபெற்ற CSK- KKR போட்டியில் இயக்குனர் அட்லீயும் நடிகர் ஷாருக்கானும் அருகருகில் அமர்ந்தது இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த நெருக்கம் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக தான் என்று ஒரு பக்கம் கூறப்பட்டாலும் சிலர் அட்லீயின் நிறத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால் கோபமான அட்லீயின் ஆஸ்தான நடிகரான விஜய்யின் ரசிகர்கள் அட்லீ அணிந்திருக்கும் ஜாக்கெட் வாங்குவதற்கே கிண்டல் செய்யும் அனைவருக்கும் ஒரு மாத காலம் ஆகும், ஏனெனில் அதன் விலை ரூபாய் 17,000, அதனால் அவர் அடைந்திருக்கும் உயரத்தை மட்டுமே பாருங்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ