![rehuman metvlrch](https://tamilanmedia.in/wp-content/uploads/2018/10/rehuman-metvlrch.jpg)
பிரபல பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை எடுத்து வைத்திருந்தார். இசையமைப்பாளர் ரஹ்மான் இசையில் பல பாடல்களை பாடியவர் சின்மயி.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்புக்காக தான் வைரமுத்து அப்படி நடந்துகொண்டார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரஹ்மான் முதன் முதலாக இவ்விசயத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.இதில் அவர் மீ டூ பற்றி நடப்பவைகளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
சிலரின் பெயர்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன. இந்த சினிமா துறை சுத்தமாகவும், பெண்களுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமைவதை காணவே நான் விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும், அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் இதோ
— A.R.Rahman (@arrahman) 22 October 2018