பிக்பாஸ் ஆயிஷாவிற்கு இவ்வளவு அழகான தங்கையா?…. முதல் முறையாக வெளியான அழகிய குடும்ப புகைப்படம்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளவர்தான் சீரியல் நடிகை ஆயிஷா.இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.

அதன் பிறகு விஜய் டிவியை விட்டு வெளியேறிய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் தனது வேறுபட்ட நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார். மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ள ஆயிஷா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் நிலையில் வீட்டிற்கு வெளியே ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவர் பற்றி பல விஷயங்கள் கூறி வருகிறார்.

இந்நிலையில் நடிகையாயிஷா தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆயிஷாவின் குடும்பமா இது என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.