தங்கச்சி நடிகைக்கு ஹீரோயின் ரோல் – அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைத்த கேமரா மேன்

பெண்கள், பல இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என பரவலாகவே இந்த புகார்கள் நீடிக்கின்றன. அதுவும் ஆணும், பெண்ணும் இரவு – பகல் நேரங்களில் ஒன்றாக பணிபுரியும் சினிமாத்துறையில் இத்தகை பிரச்னைகளும், புகார்களும் நிறைய வந்துக்கொண்டே இருக்கின்றன. பல ஆண்டுகளாக வாய் திறக்காத பல நடிகைகள், இந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து, இப்போதுதான் வெளிப்படையாக சொல்ல துவங்கி இருக்கின்றனர்.பாலைவன பறவைகள் மூலம், 1990ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தாரணி. பூவே உனக்காக, சூரிய வம்சம், வணக்கம் வாத்தியாரே, காதல் மன்னன், மிடில் கிளாஸ் மாதவன், துள்ளாத மனமும் துள்ளும், கொம்பன், மாசிலாமணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சில காட்சிகளே அந்த படங்களில் வந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒரு நடிகையாகவே இருக்கிறார். சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியலில் வாணி ராணி, நெஞ்சம் மறப்பதில்லை. தலையணைப்பூக்கள், கல்யாணப்பரிசு போன்ற சீரியல்களிலும் இவரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.நடிகை தாரணி, தனக்கு நேர்ந்த கசப்பான அட்ஜஸ்ட்மெண்ட் அனுபவம் குறித்து சமீபத்தில் பேசி இருந்தார். அதில் அவர், தமிழில் 2, 3 படங்களில் நடித்த போது இந்த பிரச்னை இல்லை. ஒரு படத்தில், ஹீரோயினாக நடிக்க அழைத்தனர். அப்போது, படத்தின் டைரக்டரும், கேமராமேனும் என்னை அதற்கு அப்ரோச் செய்தனர். டைரக்டரை காட்டிலும், கேமராமேன் ரொம்பவும் கட்டாயப்படுத்தினார். தங்கச்சி ரோலில் நடித்தவரை, ஹீரோயின் ஆக்கி இருக்கிறோம், அட்ஜஸ்ட் பண்ணுங்க என்றார். சார், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க இந்த பீல்டு என்னைப் பத்தி கேளுங்க, நான் இப்படித்தான் இந்த பீல்டுக்கு வந்தேன்னு யாராவது தப்பா சொன்னாங்கன்னா, அப்போ நீங்க என்ன சொன்னாலும், நான் கேட்கிறேன் என்று சொன்னேன்.இதை கேட்டபிறகு அவர் பதிலே சொல்லவில்லை. அப்படியே விட்டுவிட்டார். அப்புறம் பயங்கரமான ஸம்மர்ல, படத்தோட ஷூட்டிங் நடந்துச்சு.எச்எம்வி லைட்டுதான் இருக்கிறதுலயே ரொம்ப சூடானது. அந்த விளக்கை திடீருன்னு, கேமராமேன் என் பக்கம் திருப்பிட்டாரு, முகமே சூட்டுல எரிஞ்ச மாதிரி ஆயிடுச்சு, நான் அம்மான்னு அப்படியே, அலறீட்டு கீழே உட்கார்ந்துட்டேன், என கூறியிருக்கிறார் தாரணி. அதாவது, அவரது அழைப்புக்கு மறுத்த நடிகை தாரணியை, ஷூட்டிங் ஸ்பாட்டில் பழிதீர்த்திருக்கிறார் கேமராமேன்.