நானும் ரவுடி தான் வெற்றி படத்தின் மூலம் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்று உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மாஸ் ஹீரோ சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் தானா சேர்ந்த கூட்டம்.ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போன திரைப்படம் தான் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார்,ரம்யா கிருஷ்ணன்,காமெடி நடிகர் செந்தில்,மெட்ராஸ் படம் கார்த்தி நண்பனாக நடித்து இருந்த கலையரசன் இந்த படத்தில் நண்பனாக நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் என்பதை தாண்டி பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அப்படத்தில் விக்னேஷ் சிவன் எங்க அண்ணன் பாடலை எழுதியுள்ளார்.மேலும் அவர் இப்பாடல் தன் தங்கைக்கு சமர்ப்பணம் என்று கூறி முதல் முறையாக தன் தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.