சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் திருநங்கை ஜுவா. அவர் கூறுகையில் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை கிளம்பி வந்து விட்டேன். சினிமாவில் எப்படி வாய்ப்பு பெறுவது என்று தெரியாமல் ஆரம்பத்தில் கட்சி ஆபீஸில் வேலை செய்தேன். அதன் பிறகு நடனம் கற்றுக்கொண்டு மேடை நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தொடங்கினேன். அதன்மூலமாக சீரியல்களில் டச்சப் வேலை செய்யவும் ஆரம்பித்தேன். பின்னர் எனது தெரிந்தவர் மூலமாக தர்மதுரை பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதி அவர்களும் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு எனக்கு வாய்ப்பு எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. ஆகையால் குறும்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் நடிகை நயன்தாராவின் ஐரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சர்க்கார் பட சமயத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் உங்க படத்தில் நடிப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த சமயத்தில்தான் நடிகர் விஜய் சாரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது .அவர் என்னை பார்த்ததும் தர்மதுரை படத்தில் நடித்தவர் தானே நீங்கள் என்று அடையாளம் கண்டு பிடித்தார்.

எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. விஜய் சாரிடம் உங்களுடன் படம் நடிக்கணும் என்று ஆசையுடன் கேட்டேன். அதற்கு அவரும் ஐயம் வெயிட்டிங் என்று சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு நான் மிகவும் குஷி ஆகி விட்டேன். அதற்கு பிறகுதான் ரஜினி சாரின் தர்பார் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிந்து கொண்டேன்.எனக்கும் எங்க குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் தர்பார் படத்தில் ரஜினி சாருடன் நடித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.