தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல் ஹாசனின் முன்னிலையில் மிகவும் பிரமாண்டமாக துவங்கவிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் இதுவரை வெற்றிகரமாக மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மூன்று சீசன்களை முடித்த பிரபல ரிவியில் தற்போது நான்காவது சீசனை தொடக்கவுள்ளது. இதன் ப்ரொமோக்கள் சமீப நாட்களாக வெளியாகிய நிலையில், அறிவிப்பு தேதி தெரியாமல் மக்கள் அலைமோதி வந்தனர்.

இந்நிலையில், நான்காவது சீசன் துவங்கும் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இதுவரை பிக் பாஸ் குறித்து இரண்டு ப்ரோமோ மட்டுமே வெளியாகி இருந்தது. ஆனால் ரசிகர்கள் இன்னும் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், காரணம் போட்டியாளர்கள் யார் என்பதே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் நமக்கு போட்டியில் கலந்துகொள்ளும் சில பிரபலங்களின் பெயர்கள் வெளியாகிய வண்ணம் உள்ளனர்.

தற்போது இறுதியான போட்டியாளர்கள் இவர்கள் தான் உறுதியான தகவல் ஒன்று வந்துள்ளது. இதோ அந்த விவரங்கள், ஷிவானி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், அனு மோகன், ஆஜீத், கேப்ரியலா, சஞ்சனா சிங், கிரண் ரதோட், ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, பாடகர் வேல்முருகன், அபிநய ஸ்ரீ.