தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில், நடிகை வனிதா, வீட்டில் லட்சுமி குபேரன் பூஜை நடத்தியுள்ளார். அந்த பூஜையில் நடிகை வனிதாவும் அவரது கணவர் பீட்டர் பாலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பங்கேற்ற போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார். அது மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

தற்போது அதிலும் மீண்டு வந்த வனிதா அட்டகாசமாக மேக்கப்புடன் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் வனிதா புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா வெளியிட்ட செல்பி புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் செல்பியில் தெரிவது யார் தேவதையா? என்று கிண்டலடித்து வருகின்றனர். இதனை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது பாணியில் கலாய்த்து வருகின்றனர்.
#kpy pic.twitter.com/IS0gFRJVyQ
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 30, 2020