மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷுட் செய்த இந்திரஜா ஷங்கர்..! வைரலாகும் புகைப்படம் இதோ..

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர். அதன் பின்னர்  ரௌத்திரம், இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி 2, வேலைக்காரன் போன்ற பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா விஜய்யின் பிகில் திரைப்படத்தில் பாண்டியமா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தார்.

பிகில் படத்திற்கு பிறகு என்ன படம் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில் கொரோனா எல்லாவற்றையும் நிறுத்திவிட்டது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் தனது உடல் எடை குறைப்பது, சில போட்டோ ஷுட்கள் எடுப்பது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் எடுத்த ஒரு போட்டோ ஷுட் மக்களிடம் வைரலாக பேசப்படுகிறது. பெண்களை நாசமாக்கும் வேலைகள் கடந்த சில வருடங்களாக அதிகம் நடக்கிறது. அதைப்பற்றி பேசும் வகையில் அவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். சுயம் என்பது ஒருமை ஆனால் ஒரு பெண்ணுக்கு என நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். இதோ அவரது பதிவுகள்,