தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய். தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதன்மையான நடிகராகவும் விளங்கி வருகிறார் தளபதி விஜய். கடைசியாக வந்த இவரின் பிகில் படமும் வசூல் வேட்டை செய்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து, வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் காத்து கொண்டிருந்த படங்கள் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரை போற்று. இதில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.