தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சந்திராமுகி, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என அங்கேயும் தனது படங்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் கலக்கிய இவர் பாலிவுட்டிற்கு எப்போது செல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருஸ் இயக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ப்ரதி பூவன்கோழி, இப்படம் மலையாளத்தில் பெரிய ஹிட்டானது. பேருந்தில் பயணத்தின் போது தன்னை தோட்ட ஒருவனை தேடி பழிவாங்குவதே இப்படத்தின் கதையாகும், நல்ல விமர்சங்களை பெற்ற இப்படத்தை தமிழிலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹிந்தியில் இப்படத்தின் ரீமேக் உரிமத்தை போனி கபூர் கைப்பற்றியுள்ளார், பாலிவுட் முன்னணி நடிகையை இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழில் இப்படத்தின் ரீமேக் உரிமத்தை யார் கைப்பற்றியுள்ளார்கள் என தெரியவில்லை, ஆனால் இப்படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருதாகவும் கூறப்படுகிறது.
