மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மனைவிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? சந்தோஷத்தில் குடும்பத்தினர்..

கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான அர்ஜுனின் உறவினர் ஆவார். அண்மையில் அவருக்கு சீமந்தம் எல்லாம் மிகவும் பெரிதாக நடந்தது. நடிகை மேக்னா ராஜ் கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு தன்னுடைய வளயகாப்பு நிகழ்வை நடத்தினார் அந்த புகைப்படங்களை அவரின் இணையபக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.

வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றிய புகைப்படங்களும் வெளியாகின. சிரஞ்சீவியின் தம்பி வரப்போகும் குழந்தைக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தொட்டில் எல்லாம் வாங்கினார். இந்த நிலையில் மேக்னாவிற்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பம் சந்தோஷத்தில் இருந்தாலும் சிரஞ்சீவி இல்லையே என வருத்தத்தில் உள்ளனர்.