கடந்த மாதம் முதல் தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் நடிகை ரேகாவும், அவரைத் தொடர்ந்து வேல்முருகனும் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வார எவிக்ஷன் பட்டியலில் அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் இடம்பெற்றிருந்த நிலையில் சுரேஷ் வெளியேற்றப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகின.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் செய்யும் கு சும் புத் தன மான நடவடிக்கைகளால், அதிக ரசிகர்களைப் பெற்றிருக்கும் அவர் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை என்று பார்வையாளர்கள் கருதினர்.
அவ்வாறான தருணத்தில் இவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என பலருக்கும் கேள்வி எழுந்த வண்ணம் இருக்கின்றது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் முதல்முதலாக விமானநிலையத்தில் இருக்கும் காணொளியினை வெளியிட்டுள்ளார். இக்காட்சியினை தற்போது காணலாம்.