தமிழ்க் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா துறைக்கு கொடுத்துள்ளார்.இவர் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இருந்து வருகிறார். விக்னேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்கள் இயக்கி யுள்ளார்.தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் விஷயம் நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வருவது தான்.

இதையடுத்து, ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பத்து வரும் இவர்கள் திருமணம் செய்வார்களா? மாட்டார்களா? என ரசிகர்கள் வருட கணக்கில் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், நயன்தாராவின் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்த வருடம் தை மாதத்தில் நயன்தாராவின் திருமணம் நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவர்களின் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதுவும் வெளிவராமலே உள்ளது.
