ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, இந்த நிகழ்ச்சியை சூர்யா, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமீ உள்ளிட்ட பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வந்தனர்.
மேலும் கடைசியாக பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சியில் அரவிந்த் ஸ்வாமி தொகுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் தெலுங்கில் Evaru Meelo Koteeswarulu என பெயரில் தொடங்கவுள்ளது. ஜெமினி டிவி-யில் ஒளிப்பரப்பாக இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார்.இதன் ப்ரோமோவும் தற்போது வெளியாகியுள்ளது.