பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவரும் ஒரு நடிகைதானாம்!! என்ன அழகுன்னு நீங்களே பாருங்க..

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் சமயத்தில் சில புதிய சீரியல்களின் புரொமோக்கள் ஒளிபரப்பாகி வந்தன.அதில் ஒன்று தான் பாக்கியலட்சுமி, ஆரம்பத்தில் சீரியலுக்கு எந்த வரவேற்பும் இல்லை, ஆனால் போக போக மக்களின் ஆதரவை பெற்றது இந்த சீரியல்.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூட சீரியல் பாக்கியலட்சுமி அனுபவிக்கும் அனைத்தும் தாங்களும் நிஜ வாழ்க்கையில் சந்திப்பதாகவும் அதனாலேயே இந்த சீரியல் பிடித்துபோக பார்ப்பதாகவும் கூறியிருந்தனர்.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலுக்கான TRPயும் அதிகமாகி வருகிறது.ஏனெனில் மக்கள் எதிர்ப்பார்க்கும் திருப்பங்கள் சீரியலில் இடம்பெற்றுள்ளன. இந்த சீரியலில் ஒரு கடுப்பான குடும்ப தலைவராக நடிப்பவர் கோபி என்கிற சதீஷ்.