பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளா இது..? எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! வைரல் புகைப்படம் இதோ..

தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அனைத்து முண்ணனி நடிகர்களையும் இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு. ரஜினியை வைத்து இவர் எடுத்த படையப்பா வேற லெவலில் ஹிட் அடித்தது. அஜித்தை வைத்து வில்லன், விஜயை வைத்து மின்சார கண்ணா படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இயக்கம் தான் என்றில்லாமல் வில்லன், குணச்சித்திரப் பாத்திரம் என நடிப்பிலும் அசத்தி வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார் படம் என்றாலே குடும்பத்தோடு சென்றுப் பார்க்கலாம் என்னும் நம்பிக்கையை கொடுப்பார். கற்பகம் எனவரைத் திருமணம் செய்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஐஸ்வந்தி, மோனிஷா என இருமகள்கள் உள்ளனர்.

இதில் டாக்டரான மோனிஷா சென்னையில் அர்மேரா என்னும் பெயரில் டெர்மடாலஜி கிளினிக்கை திறந்திருக்கிறார். இவரது கணவர் அரவிந்தும் டாக்டர் ஆவார். மோனிஷா, அரவிந்த் ஜோடியாக இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள், மருமகனா இது என கமெண்ட் செய்துவருகின்றனர்.