கொ ரோனா காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு படப்பிடிப்பு நடத்தப்படவில்லை என்பது நமக்கு தெரியும். இதனால் நடிகர் நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர், என்பதை நாம் பார்த்தோம். மேலும் இதனால் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் சில சின்ன வயது புகைப்படம், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள் என வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு குழந்தையை க ட்டிப்பி டித்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதலில் அவர் யார் என்று தெரியவில்லை, பின்பு தான் அவர் ஒரு நடிகர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த நடிகராம்.

அதில் வில்லனாக நடித்த நடிகர் அமிதேஷ் தான் நடிகர் ரஜினியுடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் நடிகர் அமிதேஷ் தமிழை தாண்டி தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.
