பிரபல டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் சரவணன் மீனாட்சி, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

மேலும், இந்நிலையில் தற்பொழுது நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கல க்கி வந்த இவர் தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும், சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram