கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை லட்சுமிமேனன்,இவர் சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். நல்ல வசூல் வெற்றியைத் தேடித்தந்த சுந்தர பாண்டியன் என்ற படத்தில் நடித்தார் .சுந்தர பாண்டியன் திரைப்படம் வெளிவரும் முன்னரே கும்கி திரைப்படம் வெளியானதால் இவர் கும்கி திரைப்படம் மூலமே பிரபலமானார்.
நடிகை லக்ஷிமேனன் கும்கி, நான் சிகப்பு மனிதன் ,குட்டிப்புலி ,பாண்டியநாடு, ஜிகிர் தண்டா,மிருதன் ரெக்க,போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்,ஆனால் தற்போது சில மாதங்களாக எந்த ஒரு படமும் கைவசம் இல்லாததால் மனவேதனையில் இருந்தார், இவருக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் காமெடி நடிகர் யோகிபாபு இவருடன் சேர்ந்து நடிக்க உள்ளாராம்.
தற்போது இவர் புதுமுக இயக்குனர் முருகேச பூபதி இயக்கத்தில் முன்னணி காமெடி நடிகர் ஆன யோகிபாபு உடன் இணைந்து நடிக்கவுள்ளார் இந்த படத்தின் கதைக்களம் காமெடி,காதல் நிறைந்து உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது
