தமிழரின் பண்பாடான ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,
இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது ,இந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பலரும் ஈடுபாடுடன் காளையை அடக்கி அனைவரையும் பிரமிக்க வைத்தனர் ,இதனில் ஒரு மாடுபிடி வீரர் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டி சென்றார் ,
இது அவருக்கு புதுசல்ல இதேபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்துள்ளார் ,இவர் இதில் ஜமுதல் பரிசு வென்றதால் முதல் பரிசான கார் பெற்று கொண்டார் ,இரண்டாவது பரிசான இரண்டு சக்கர வாகனத்தை மற்றொருவர் பெற்று சென்றார், இவர் 18 காளைகளை அடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது .,