அட.., இவர் தான் மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகளா..? அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா..?

மூத்த நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தான் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த செய்தி திரை உலகுநர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். முன்னணி நடிகர்கள் அனைவரும் நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு அவரது உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மரணத்திற்கு பிறகு இவரை பற்றியும் இவரது வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்வதற்கு நெட்டிசன்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிரதாப் போத்தனின் 31 வயது மகள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

அவரின் மகள் கேயா தன்னுடைய தந்தையைப் போலவே கலைத்துறையை தேர்வு செய்து அதில் பணியாற்றி வருகிறார். இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் பல பாடல்களை எழுதி பாடியுள்ளது மட்டுமல்லாமல் ஒரு இசை குழுவையும் நடத்தி வருகிறார். இவர் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய தந்தையுடன் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.