இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் பலரும் அவர்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள். அவ்வகையில் பாலிவுட் நாயகியான ஆதார் சர்மா, தனித்துவமான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இயற்கை கருப்பொருளாக புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அதில் பச்சை இலைகளால் தைக்கப்பட்டது போல காட்சியளிக்கும் பிராக் ஒன்றை அணிந்து இயற்கையின் பிரதிநிதியாக ஜொலித்த அவரின் காதுகளில் வெட்டுக்கிளி காதணி அணிந்துள்ளார். இளம் வெயிலில் மொட்டை வெயிலில் இயற்கையோடு இயற்கையாய் பெண் உருவம் பூண்ட மரமாக போஸ் கொடுத்துள்ளார் அவர்.

அந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பதிவில், இயற்கை ஒருபோதும் கசப்பானதல்ல, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்க உங்களை அனுமதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு மனிதர்கள் ஆகிய நமக்கு அதிக சக்தி பூண்டு என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரது இலைதழை போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.