“கோதன் நியாய் யோஜனா”…. ஒரு லிட்டர் பசு கோமியம் 4 ரூபாய்…. மாநில அரசு போட்ட பலே திட்டம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு “கோதன் நியாய் யோஜனா”என்ற திட்டத்தின் மூலம் பசுவின் கோமியத்தை லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி ஹரேலி திருவிழா அன்று தொடங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கால்நடை காப்பகங்கள் மூலம் பசுவின் கோமியத்தை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. அதனை லிட்டர் நான்கு ரூபாய்க்கு கொடுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது.

அப்போது மண்புழு உரம் தயாரிக்க பசுவின் சாணத்தை ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்ய தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் 150 கோடி ரூபாய்க்கு மேல் மாற்று சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பசுவின் கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.